மிக்ஸட் புரூட்ஸ் கஸ்டர்ட் செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க?

மிக்ஸட் புரூட்ஸ் கஸ்டர்ட் செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

பால் 1 லிட்டர் (கொழுப்பு நீக்காதது)

துண்டுகளாக நறுக்கிய வாழைப்பழம்,

திராட்சை, மாம்பழம், ஆப்பிள்,

மாதுளை தலா 1/2 கப்

கஸ்டர்ட் பவுடர் – 3

டேபிள் ஸ்பூன் சர்க்கரை – 3 டேபிள்

ஸ்பூன் செர்ரிப்பழம் – 4

செய்முறை விளக்கம்

முதலில் அரை டம்ளர் பாலைத் தனியாக எடுத்து வைக்கவும். மீத மிருக்கும் பாலை அடிகனமான பாத் திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடுபடுத்தவும். பால் கொதித்ததும் தீயை நன்றாகக் குறைத்து விடவும்.
இப்போது, தனியாக எடுத்து வைத் திருக்கும் பாலுடன், கஸ்டர்ட் பவுடர் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும். இதை அடுப்பில் இருக்கும் பாலில் ஊற்றி 4 முதல் 5 நிமிடங்கள் வரைவிடாமல் கிளற வேண்டும்.
இப்போது அடுப்பில் இருக்கும் பால் கெட்டியாகத் தொடங்கும், அதனுடன் சர்க்கரை சேர்த்து அது கரையும்வரை நன்றாகக் கலக்கவும்.
பிறகு அதை அகலமான பாத்திரத்தில் ஊற்றி ஆறவைக்கவும். பாலின் மேல், பால் ஆடை உருவாகாத வாறு அவ்வப்போது கிளறி விடவும்.
பால் நன்றாக ஆறியதும், அதில் பழங்களை சேர்த்துக் கலந்து, குளிர் சாதனப் பெட்டியில் வைக்கவும்,மூன்று மணி நேரத்தில் கஸ்டர்ட் நன்றாக செட் ஆகியிருக்கும்.
அதை வெளியில் எடுத்து பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றி, மேலே அலங் காரத்துக்காக செர்ரிப் வைக்கவும், நீங்கள் விரும்பினால் பழங்களை மெலிதாக நறுக்கிய பாதாம், பேரீச்சை ஆகியவற்றையும் மேலே தூவி அலங் கரிக்கலாம். இப்போது ‘மிக்ஸட் புரூட்ஸ் கஸ்டர்ட்’ தயார்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் செய்து அசத்துங்கள்….

Leave a Reply