சத்தான ராகி சாக்லேட் மில்க்ஜேக் செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க?

சத்தான ராகி சாக்லேட் மில்க்ஜேக் செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க.

தேவையான மூலப் பொருள்கள்

  • முளைகட்டிய கேழ்வரகு மாவு – 3 டீஸ்பூன்
  • பால் -1 டம்ளர்
  • நாட்டுச் சர்க்கரை – 3 டீஸ்பூன்
  • கொக்கோ பவுடர் 1/2 டீஸ்பூன்
  • பாதாம் – 5
  • முந்திரி – 1

சத்தான ராகி சாக்லேட் மில்க்ஜேக் செய்முறைகள்

பாதாமை சூடான தண்ணீரில் ஊற வைத்து தோலுரித்துக்கொள்ளவும். பாலைக் காய்ச்சி ஆற வைக்கவும். முளைகட்டிய கேழ்வரகு மாவு இல்லை என்றால், வழக்கமாக உபயோகிக்கும் கேழ்வரகு மாவையே பயன்படுத்துங்கள்.
அடி கனமான பாத்திரத்தில் கேழ்வரகு மாவைக் கொட்டி, அதில் அரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைக்கவும். பின்னர் இந்தக் கரைசலை அடுப்பில் வைத்து மிதமான தீயில் 2 முதல் 3 நிமிடங்கள் வரை விடாமல் கிளற வேண்டும். மாவு நன்றாக வெந்தவுடன் அதில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
அது கரைந்ததும் கொக்கோ பவுடரை சேர்த்து மீண்டும் நன்றாகக் கலக்கவும். இப்போது கேழ்வரகு மாவு கலவை ‘களி’ பதத்துக்குவந்திருக்கும். இந்த சமயத்தில் அடுப்பை அணைத்து கலவையை ஆற வைக்கவும்.
பெரிய மிக்ஸி ஜாரில் பாதாமையும், முந்திரியையும் போட்டு தூளாகப் பொடித்துக்கொள்ளவும். பின்பு அதில் தயாரித்து வைத்திருக்கும் கேழ்வரகு கலவை மற்றும் அரை டம்ளர் பால் ஊற்றி நன்றாக அடிக்கவும்.
பின்னர் மீதம் இருக்கும் பாலையும் அதனுடன் கலந்து பரிமாறவும். சுவையும், ஊட்டச்சத்தும் நிறைந்த ராகி சாக்லேட் மில்க் ஷேக் தயார். இதன் மேலே பொடிதாக நறுக்கிய உலர் பழங்களை தூவி அலங்கரிக்கலாம், குளிர வைத்தும் பருகலாம்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் செய்து அசத்துங்கள்….

Leave a Reply