கொல்கத்தா மலாய் சந்தேஷ் செய்வது எப்படி பார்க்கலாம்வாங்க?

கொல்கத்தா மலாய் சந்தேஷ் செய்வது எப்படி பார்க்கலாம்வாங்க.

தேவையான பொருட்கள் 

  • கொழுப்பு நீக்காத பால் – 2 லிட்டர்.
  • எலுமிச்சம் பழச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்
  • சர்க்கரை அல்லது வெல்லம் -1/2 கப்
  • ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்

மலாய் தயாரிக்க

  • கொழுப்பு நீக்காத பால் – 1 லிட்டர்
  • ரோஸ் வாட்டர் – 2 டேபிள் ஸ்பூன்
  • முந்திரி, பிஸ்தா, பாதாம்- 1/4 கப் (பொடிதாகநறுக்கியது)
  • குங்குமப்பூ – 1/2 டீஸ்பூன்
  • சர்க்கரை 1/4கப்

கொல்கத்தா மலாய் சந்தேஷ் தயாரிக்க தேவையான மூலப் பொருல் செய்முறை

2 லிட்டர் பாலை அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும். அது நன்றாகக் கொதிக்கும்போது அதில், எலுமிச்சம் பழச்சாற்றை ஊற்றி கிளறவும்.
5 நிமிடங்களுக்குப் பிறகு பால் திரியத் தொடங்கும். அது முழுவதுமாக திரிந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும். பின்பு இந்தப் பாலை சுத்தமான மெல்லிய பருத்தித் துணியில் ஊற்றி வடிகட்டவும் துணியில் தங்கி. இருக்கும் பன்னீரை மூட்டையாகக் கட்டவும் அதன் மேல் கனமான பாத்திரத்தை வைத்து தண்ணீர் முழுவது மாக வடியும்படி செய்யவும்.
பின்பு அந்த பன்னீருடன் பொடித்த சர்க்கரை அல்லது வெல்லத்தை சேர்த்து நன்றாகப் பிசையவும். இதைவடமாநிலத்தில் ‘சந்தேஷ்’ என்று குறிப்பிடுவார்கள்.
பின்னர் அடி கனமான, அகலமான பாத்திரத்தில் 1 லிட்டர் பாலை ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்த வும். பால் நன்றாகக் கொதித்து பாதி அளவாக வற்றியதும், அதில் சர்க்கரை, ஏலக்காய் பொடி, குங்குமப்பூ, ரோஸ்வாட்டர் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். பிறகு அதில் தயாரித்து வைத்திருக்கும் சந்தேஷை உதிர்த்துப் போட்டு நன்றாகக் கிளறவும்.
இந்தக் கலவை கெட்டியானதும் நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற வைக்கவும். பின்னர் விரும்பிய வடிவில் வெட்டி முந்திரி, பாதாம், பிஸ்தா கலவையை அதன் மேல் தூவி பரிமாறவும்.

Read More : சத்தான ராகி சாக்லேட் மில்க்ஜேக் செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க?

Leave a Reply