சர்க்கரை வள்ளி கிழங்கு அல்வா செய்வது எப்படி பார்க்கலாம்வாங்க.
தேவையானபொருள்
சர்க்கரைவள்ளிக் கிழங்கு – 500 கிராம்
நெய் -8 தேக்கரண்டி
முந்திரி – சிறிதளவு
உலர்ந்த திராட்சை – சிறிதளவு
ஏலக்காய் பொடி 1/4 டீஸ்பூன்
வெல்லம் 150 கிராம்
செய் முறைகளை தெரிந்து கொள்வோம்
சர்க்கரைவள்ளிக் கிழங்குகளை நன்றாக சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பின்னர் அவற்றை இட்லியைப்போல ஆவியில் வேக வைக்கவும். கிழங்குகள் ஆறியதும் அவற்றின் மேல் தோலை நீக்கி நன்றாக மசித்துக்கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 6 தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்தவும். பின்பு அதில் முந்திரி, திராட்சை ஆகியவற்றை போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர், மசித்து வைத் திருக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கை அதனுடன் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
5 நிமிடங்கள் கழித்து, தூளாக்கப்பட்ட வெல்லத்தை அதில் கொட்டி கிளறவும். வெல்லம் கரைந்து கிழங்குடன் சேரஆரம்பிக்கும்போது, அதில் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்றாகக் கிளறவும்.
சிறிது நேரத்தில், கிழங்கு பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும். இந்த பதத்தில் அடுப்பை அணைத்து விட்டு, 2 தேக்கரண்டி நெய்யை அல்வாவின் மேல் ஊற்றி ஆறவைக்கவும். இப்பொழுது சுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு அல்வா தயார்.
Read More : கொல்கத்தா மலாய் சந்தேஷ் செய்வது எப்படி பார்க்கலாம்வாங்க?